பங்குனி உத்திரத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டும்: இந்து முன்னணி தலைவர் அறிக்கை!
பங்குனி உத்திரத்திருவிழா என்பது இந்துக்களின் மிகவும் புனிதமான விழா ஆகும். இந்த நன்னாளில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளார். இதற்கு இந்து முன்னணி பேரியக்கம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.
பெரும்பான்மை மக்களின் வழிபாட்டுக்குரிய திருவிழாவான பங்குனி உத்திரத்தை அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என இந்து முன்னணி பேரியக்கம் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறது.#பங்குனிஉத்திரம்#இந்துமுன்னணிhttps://t.co/rwwCdpzPRf
— Hindu Munnani (@hindumunnaniorg) March 16, 2022
பங்குனி உத்திரத்திருநாளில் குன்று மேல் இருக்கும் முருகன் கோயில்களில் மிகவும் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த நன்நாளில் முருகன், தெய்வாணை திருமணம், ஸ்ரீராமர் சீதை திருமணம், மதுரை சுந்தரேஸ்வர் மீனாட்சி திருமணம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரங்கமன்னார் திருமணம், கலியுக வரதன் ஸ்ரீஐயப்பன் அவதார நாள், பஞ்ச பாண்டவர்களில் அர்ஜூனன் பிறந்தது போன்று விஷேசங்கள் நடைபெறும்.
இது போன்ற புனித நாளில் மக்கள் வழிபாடு நடத்துவதற்கு அரசு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று இந்து முன்னணி பேரியக்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter