படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் வாழ்க்கை படம்தான் காஷ்மீர் பைல்ஸ்: அனைவரும் பார்க்க இந்து முன்னணி தலைவர் அறிவுரை!
சொந்த நாட்டிலேயே மக்கள் அகதிகளாக படுகொலை செய்யப்பட்ட இந்துக்களின் வாழ்க்கையை கூறும் திரைப்படமான காஷ்மீர் பைல்ஸ் அனைத்து மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்களுடன் இணைந்து படத்தை பார்த்து அறிவுரை வழங்கிய இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம்.
சொந்த நாட்டிலேயே அகதிகளாக,படுகொலை செய்யப்பட்ட ஹிந்துக்களின் வாழ்க்கையை கூறும் #TheKashmirFiles திரைப்படத்தை மா,தலைவர் திரு.காடேஸ்வராசுப்பிரமணியம் அவர்கள் மாநில,மாவட்ட,நகர,ஒன்றிய பொறுப்பாளர்களுடன் இணைந்து படத்தை பார்த்து பொறுப்பாளர்களுக்கு அறிவுரை வழங்கினார்.#இந்துமுன்னணி pic.twitter.com/SU7reOHo0C
— Hindu Munnani (@hindumunnaniorg) March 18, 2022
ஜம்மு காஷ்மீரில் கடந்த 1990ம் ஆண்டு இந்து பண்டிட்கள் ஒரு அமைப்பின் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் சொந்த நாட்டிலேயே பல லட்சக்கணக்கானோர்கள் தங்களின் வாழ்வதார இடங்களை விட்டு வெளியேறி வந்தனர். அது பற்றிய கதையை மையமாக வைத்து காஷ்மீர் பைல்ஸ் என்ற படம் உருவாகியுள்ளது. இப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பலர் உண்மையான கதையை கண்முன்னே காட்டப்பட்டுள்ளதாகவும் பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில், இது போன்ற நல்ல கருத்துள்ள படத்தை இந்துக்கள் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவுரை வழங்கியுள்ளார். முக்கியமாக இந்து முன்னணி நிர்வாகிகள் அனைவரும் கட்டாயம் பார்க்கவும் கூறியுள்ளார்.
Source, Image Courtesy: Twiter