அரசு பள்ளி வாட்ஸ்அப் குழுவில் கிறிஸ்தவர்கள் மதப்பிரச்சாரம்: ஆசிரியை மீது இந்து முன்னணி புகார்!

Update: 2022-03-19 04:35 GMT

அரசுப் பள்ளியில் செயல்பட்டு வரும் வாட்ஸ்அப் குழுவிவில் கிறிஸ்தவ மதத்தினை பரப்பும் வகையில் மதப்பிரச்சாரம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து முன்னணி புகார் அளித்துள்ளது.

திருப்பூர் மாவட்டம், குமார்நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வரும் நிலையில், அங்கு படித்து வரும் 10ம் வகுப்பு மாணவர்களின் வாட்ஸ்அப் குழு இயங்கி வருகிறது.

இந்நிலையில், நியானாப்ரியா என்கின்ற ஆசிரியை 10ம் வகுப்பு மாணவர்களின் வாட்ஸ்அப் குழுவில், கிறிஸ்தவ மதத்தை போதிக்கின்ற வகையில் பதிவுகளை அனுப்பி வந்துள்ளார். இது பற்றி மாணவர்கள் அவர்களின பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி மாணவரின் பெற்றோர்கள் இந்து முன்னணி மாவட்ட செயலாளரிடம் தகவல் கூறியுள்ளனர். இதனை தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகளுடன் சென்று பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர்களிடம் புகார் அளித்துள்ளனர். கிறிஸ்தவ மதத்தை பரப்பும் ஆசிரியை உடனடியாக மாற்ற வேண்டும் என்று புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.

Source, Image Courtesy: Hindu Munnani

Tags:    

Similar News