நள்ளிரவில் பயங்கரம்: பாறாங்கற்களை வைத்து குருவாயூர் ரயிலை கவிழ்க்க சதி: ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்!

Update: 2022-03-21 03:10 GMT
நள்ளிரவில் பயங்கரம்: பாறாங்கற்களை வைத்து குருவாயூர் ரயிலை கவிழ்க்க சதி: ஆயிரக்கணக்கான பயணிகள் உயிர் தப்பினர்!

கன்னியாகுமரியில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து குருவாயூர் எக்ஸ்பிஸ் ரயிலை கவிழ்க்க சதி செயலில் ஈடுபட்ட இளைஞர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

நாகர்கோயில் மற்றும் திருவனந்தபுரம் ரயில் பாதையில் கொல்லாய் என்கின்ற இடத்தில் நள்ளிரவு நேரத்தில் பாறாங்கற்களை இளைஞர் ஒருவர் வைத்துள்ளார். அந்த சமயத்தில் சென்னையில் இருந்து குருவாயூர் சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் கொல்லாய் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது கற்களை உடைத்து கொண்டு சென்றுள்ளது. இதனால் சத்தம் பயங்கரமாக கேட்கப்பட்டதை தொடர்ந்து பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நல்ல வேளையாக அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் ரயில் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவர் மாவோயிஸ்ட் உடன் தொடர்பில் இருப்பாரா என்ற கோணத்திலும் போலீஸ் விசாரணை நடைபெறுகிறது.

Source: Polimer

Image Courtesy: Rail info

Tags:    

Similar News