வியாபாரத்திற்காக இந்து கடவுள்கள் தவறாக சித்தரிப்பு: இஸ்லாமியர் நடத்தும் கறிக்கடையில் பெருமாள் படத்துடன் காலண்டர் அச்சடிப்பு!

Update: 2022-03-21 04:19 GMT

சமீப காலமாக இந்து தெய்வங்கள் தவறாக சித்தரிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக தங்களின் வியாபார நோக்கத்திற்காக சில அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்து தெய்வங்களை தவறாக சித்தரித்து வருகின்றனர்.

Full View

அதே போன்று தற்போது சமூக வலைதளங்களில் ஒரு காலண்டர் வைரலாகி வருகிறது. அதில் இஸ்லாமியர் நடத்தும் கறிக்கடையில் இந்துக்கள் புனிதமாக வணங்கி வரும் பெருமாள் படம் இடம்பெற்றுள்ளது. அதில் பிஸ்மி சிக்கன் கடை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெருமாள் கடவுளை அவமதிக்கின்ற நோக்கில் கறிக்கடை உரிமையாளர் செயல்படுகின்றார் என்று சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்துள்ளது.

அதே போன்று சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள சிவன் கோயில் முன்பாக இஸ்லாமியர்கள் மாட்டு இறைச்சி கடையை திறந்திருந்தனர். இதனை உடனடியாக அகற்ற வேண்டும் என்று இந்து அமைப்புகள் போராட்டம் நடத்திய பின்னர் அந்த கடை அப்புறப்படுத்தப்பட்டது. இதே போன்று தொடர்ந்து இந்துக்களை அவமதிக்கும் செயல்கள் தமிழகத்தில் அதிகரித்திருப்பதாக இந்து அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளது.

Source, Image Courtesy: Thamarai Tv

Tags:    

Similar News