மயில் சிலை கடத்தல் வழக்கில் தொடர்பா? கபாலீஸ்வரர் கோயில் மண்டபத்தில் இணை ஆணையரின் கார் டிரைவர் மர்ம மரணம்!

Update: 2022-03-21 09:50 GMT

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் இணை ஆணையராக இருப்பவர் காவேரி. இவரது கார் டிரைவர் தற்போது மர்மமான முறையில் அந்த கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தில் தூக்கில் தொங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கபாலீஸ்வரர் கோயில் உள்ளது. அங்கு இணை ஆணையராக காவேரி பணியாற்றி வருகிறார். அவருக்கு கார் டிரைவராக ஜெயச்சந்திரன் இருக்கிறார். எப்போதும் கபாலீஸ்வரர் கோயிலில் தான் இருப்பார் என கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை வழக்கம் போன்று பணிக்கு சென்ற ஜெயச்சந்திரன் அன்று இரவு இணை ஆணையர் காவேரியை அவரது வீட்டில் விட்டு, மீண்டும் கோயில் மண்டபத்திற்கு சென்றுள்ளார். அப்போது சிறிது நேரத்தில் ஊழியர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெயச்சந்திரன் பிணமாக தூக்கில் தொங்கியுள்ளார். இது பற்றி கோயில் ஊழியர்கள் இணை ஆணையர் மற்றும் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவலை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது பற்றி போலீசார் சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், கோயிலில் மயில் சிலை மாயமானது பற்றி உயர்நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. தற்போது கோயில் இணை ஆணையரின் கார் டிரைவர் மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது மற்றவர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு வேலை மயில் சிலை காணாமல் போனதுக்கு டிரைவருக்கு தொடர்பு இருக்கலாமா என்று பக்தர்கள் பேசி வருகின்றனர். எது எப்படியோ அனைத்தும் முழுமையான விசாரணைக்கு பின்னரே உண்மை நிலவரம் தெரியவரும்.

Source, Image Courtesy: Dinakaran

Tags:    

Similar News