நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இந்து முன்னணி வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
நீதிபதிகளுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் பயங்கரவாதிகளை கண்டித்தும்
— Hindu Munnani (@hindumunnaniorg) March 21, 2022
அத்தகைய பயங்கரவாத இயக்கங்களை தடை செய்ய கோரியும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் இந்து வழக்கறிஞர் முன்னணி வழக்கறிஞர்கள் போராட்டம்.#இந்துமுன்னணி #ஹிஜாப் #TNTJ #hijab #ஹிஜாப் #Hijab pic.twitter.com/ZgZqsKJgYH
சமீபத்தில் ஹிஜாப் அணிவதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தடை விதித்தது. கல்வி நிலையங்களில் கட்டாயம் சீருடைகளை பின்பற்ற வேண்டும் என்றும் தீர்ப்பில் கூறினர். இந்த தீர்ப்புக்கு எதிர் வினையாற்றுகிறோம் என்று சிலர் நீதிமன்றத்தின் மாண்பை குலைக்கும் வகையில் கருத்துக்களை கூறி வருகின்றனர். அது போன்று மதுரையில் தவ்ஹீத் ஜமாஅத் என்ற இஸ்லாமிய அமைப்பு போராட்டம் நடத்தியது. அப்போது நீதிபதிகள் மற்றும் பிரதமர் உள்ளிட்டவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இந்த சம்பவத்துக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. அதே போன்று பாஜக மற்றும் இந்து முன்னணியினரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்நிலையில், தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புக்கு இந்து முன்னணி வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்தது மட்டுமின்றி அந்த அமைப்பு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
Source, Image Courtesy: Twiter