நகைக்கடன் தள்ளுபடியில் பாரபட்சம்: மத்திய கூட்டுறவு வங்கியை முற்றுகையிட்ட மக்கள்!
திமுக ஆட்சி அமைந்ததும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் பிரச்சாரத்தில் கூறினார். அதே போன்று ஆட்சிக்கு வந்த பின்னர் நகைக்கடன் தள்ளுபடியில் பல்வேறு மாற்றங்களை திமுக அரசு கொண்டு வந்தது. இதனால் 35 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏமாந்து போனதுதான் மிச்சம்.
இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் நகைகடனை தள்ளுபடி செய்யாமல் நோட்டீஸ் அனுப்பியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மத்திய கூட்டுறவு வங்கி கிளையை முற்றுகையிட்டுள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது.
அதாவது நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு பாரபட்சம் காட்டுவதாகவும் புகார் தெரிவித்தனர். மேலும், நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லிவிட்டு தற்போது நகைக்கு வட்டி கட்டுவதற்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக அரசுக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் அளித்ததை போன்று உடனடியாக நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Source, Image Courtesy: News J