கிருஷ்ணகிரி: கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து முன்னணி புகார்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அருள்மிகு பிரசன்ன பார்வதி சந்திரமௌலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. அக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் சட்ட விரோதமான முறையில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருப்பதாகவும், அதனை உடனடியாக அகற்ற வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கிருஷ்ணகிரி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி - அருள்மிகு பிரசன்ன பார்வதி சந்திரமௌலீஸ்வரர் கோவில் இடத்தில் உள்ள சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும், கட்டிடங்களையும் அகற்ற வேண்டியும், சொத்துக்களை மீட்க வேண்டியும், அடிப்படை வசதி செய்து தர கோரியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் #இந்துமுன்னணி புகார் மனு.
— Hindu Munnani (@hindumunnaniorg) March 30, 2022
#கோவில்நிலம் pic.twitter.com/ZL7oa0smZb
இது குறித்து இந்து முன்னணி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: கிருஷ்ணகிரி, அருள்மிகு பிரசன்ன பார்வதி சந்திரமௌலீஸ்வரர் கோயில் இடத்தில் உள்ள சட்ட விரோதமான ஆக்கிரமிப்புகளையும், கட்டடங்களையும் அகற்ற வேண்டியும், சொத்துக்களை மீட்க வேண்டியும், அடிப்படை வசதி செய்து தரகோரியும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இந்து முன்னணி புகார் மனு அளித்துள்ளது. இவ்வாறு அந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Twiter