கோவை மக்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய அமைப்புகள்: போலீஸ் கமிஷ்னரிடம் இந்து முன்னணி தலைவர் புகார்!
சமீபகாலமாக கோவையில் இஸ்லாமிய அமைப்புகள் மக்களை அச்சுறுத்தி வருவதாக தமிழக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
இது தொடர்பாக புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: கோவையில் நடைபெற்ற குற்றச்சம்பவங்களில் பலர் கைது செய்யாமல் உள்ளனர். அதே சமயம் ஹிஜாப் பிரச்சனை முடிந்த நிலையில் மீண்டும் கோவையில் மிகப்பெரிய கலவரத்தை நடத்தலாம் என்று இஸ்லாமிய அமைப்புகள் திட்டமிட்டுள்ளது.
கோவை மக்களை அச்சுறுத்தும் இஸ்லாமிய அமைப்புகள் காவல்துறை ஆணையரிடம் இந்துமுன்னணி புகார்.
— Hindu Munnani (@hindumunnaniorg) March 30, 2022
மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பத்திரிக்கையாளர் சந்திப்பு.#இந்துமுன்னணி #கோவை #முஸ்லீம் #இந்துக்கள் #ஹிஜாப் #TheKashmirFiles pic.twitter.com/3i0dS2dK5z
மேலும், இந்துக்களிடம் குரான் புத்தகத்தை கொடுத்து அச்சுறுத்தி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களை காவல்துறை தடுக்க வேண்டும். அதற்காகத்தான் உளவுத்துறை போலீசார் உள்ளனர். அவர்களிடம் தகவலை பெற்று இது போன்ற அமைப்புகள் அச்சுறுத்துவதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Twiter