சிவன் கோயில் இடத்தை ஆக்கிரமித்து கடை: இந்து முன்னணி புகாரால் கடைக்கு சீல்!

Update: 2022-04-04 06:49 GMT

சென்னை, சேப்பாக்கம், கோமலீஸ்வரன் பேட்டையில் சிவன் கோயிலுக்கு சொந்தமான இடம் உள்ளது. அந்த இடத்தை சிலர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து மெக்கானிக் நடத்தி வந்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்த இந்து முன்னணி நிர்வாகிகள் சம்பந்தபட்ட கடையை உடனடியாக அகற்றி சீல் வைக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். புகாரை தொடர்ந்து சம்பந்தபட்ட இடத்தில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டதில் அங்கு மெக்கானிக் கடை இருந்ததை கண்டுப்பிடித்தனர். உடனடியாக கடைக்கு சீல் வைத்து உத்தரவிட்டனர். இந்து முன்னணி புகாரால் சிவன் கோயில் இடம் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News