திருச்சியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சார்பில் செயற்குழு கூட்டம்!

Update: 2022-04-10 12:59 GMT

திருச்சியில் இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் சார்பில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றுள்ளது.

இந்து முன்னணி சார்பில் பல்வேறு அணிகள் செயல்பட்டு வருகிறது. அதில் ஒன்று இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கம் உள்ளது. இதில் தமிழகம் முழுவதும் ஆட்டோ ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அது மட்டுமின்றி இந்துக்களுக்கு எதாவது வாகன உதவிகள் தேவைப்படும்போது இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணியினர் ஓடி வந்து உதவி செய்வதை பார்க்க முடிகிறது.

இந்நிலையில், இந்து முன்னணி ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இந்து ஆட்டோ தொழிலாளர்கள் முன்னணி சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சியில் இனிதே துவங்கியது. இதில் 300க்கும் மேற்பட்ட ஆட்டோ தொழிலாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் தமிழகம் முழுவதிலும் இருந்து பங்கேற்றுள்ளனர். இவ்வாறு அந்த ட்விட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News