நடராஜர் சிலை கடத்தல் முயன்று சிக்கிய 'மர்ம நபர்கள்'

Update: 2022-04-16 12:42 GMT
நடராஜர் சிலை கடத்தல் முயன்று சிக்கிய மர்ம நபர்கள்

தஞ்சை மாவட்டம், பாபநாசத்தில் நடராஜர் உலோக சிலையை ரூ.30 லட்சத்திற்கு விற்க முயன்ற மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Full View

தஞ்சை மாரியம்மன் கோயில் பைபாஸ் கும்பகோணம் சாலை சந்திப்பில் சிலை திருட்டு சம்பந்தமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது பாபநாசம் தாலுகா ராஜகிரியை சேர்ந்த பிரபாகரன், பைசல் அகமது, சாகுல் அமீது ஆகியோரை பிடித்து விசாரித்ததில் திருவாச்சியில் சுடர்அறுந்து எடுக்கப்பட்ட நிலையில் சுமார் முக்கால் அடி உயரமும், ஒரு கிலோ எடையுள்ள நடராஜர் சிலையை மீட்டனர்.

இவர்கள் மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர். சமீபகாலமாக கோயில் சிலைகள் மற்றும் பழமைவாய்ந்த பொருட்கள் திருடுபோவது அதிகரித்துள்ளது.

Source: Thanthi Tv

Image Courtesy: E Gov Magazine

Tags:    

Similar News