மறுபடியும் தொடர் மின்வெட்டா? அமைச்சர் செந்தில்பாலாஜி கூறும் நிலவரம் என்ன?

Update: 2022-04-19 04:34 GMT

தமிழகத்தில் வரும் காலங்களில் ஏற்படும் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க, தமிழக அரசு நிலக்கரி இறக்குமதி செய்யும் முடிவை எடுத்துள்ளது.


"தி.மு.க ஆட்சி பொறுப்பேற்றது முதல் சட்டம்-ஒழுங்கு மற்றும் ஆட்சி நிர்வாகம் என்று அனைத்து விஷயங்களிலும் சுமாராக செயல்பட்டு வருகிறது" என்று பலர் கருத்து கூறி வரும் நிலை இருந்து வருகிறது.


தற்போது தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழகத்திலூள்ள மின்சார இருப்பு மற்றும் பற்றாக்குறை குறித்து கூறிய கருத்துக்கள் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


அவர் கூறியதாவது : கடந்த ஆண்டு கோடையில், தமிழகத்தில் மின்சார தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்று இருந்தது.இந்த ஆண்டு கோடை காலத்தில் 17,196 மெகாவாட் என்று அதிகரித்துள்ளது.


2500 மெகாவாட் பற்றாக்குறை இருப்பதாக கருதப்படுகிறது. இந்தப் பற்றாக்குறையை சமாளிக்க ஏப்ரல் மே மாதங்களில் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

என்று அமைச்சர் கூறியுள்ளார்.


அமைச்சரின் கருத்து தமிழக மக்களை பீதி அடையச் செய்துள்ளது. மீண்டும் 2006- 2011 தி.மு.க ஆட்சி காலத்தில் ஏற்பட்ட கொடூரமான மின்வெட்டு காலம் மீண்டும் திரும்பி விடுமோ? என்று அச்சப்படுகின்றனர்.


Polimer

Tags:    

Similar News