நான்காம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் - பள்ளி ஆசிரியருக்கு தர்ம அடி கொடுத்த ஊர்மக்கள்

Update: 2022-04-24 14:00 GMT

விழுப்புரம் : நான்காம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவிக்கு,  பாலியல் தொல்லை கொடுத்ததாக அரசு பள்ளி ஆசிரியர் மீது குற்றச்சாட்டு.


விழுப்புரம் மாவட்டம், 'நன்னட்டம்பாளையம்' என்னும் கிராமத்தில் அரசு ஆரம்ப பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் ஆசிரியர் 'பாபு' என்பவர், நான்காம் வகுப்பு பயிலும் மாணவியிடம் பாலியல் முயற்சியில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி தன் பெற்றோரிடம் இது குறித்து   தெரிவித்துள்ளார்.

உடனடியாக பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளிக்குள் நுழைந்து, ஆசிரியர் பாபுவை தாக்கினர். உடனடியாக சம்பவம் அறிந்து வந்த காவல்துறையினர் பாபுவை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். 


ஆசிரியரின் இச்செயல் குறித்து முதன்மை கல்வி அலுவலருக்கு புகார் அளிக்கவே, பள்ளி மாணவர்களிடம் கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப்பள்ளி ஆசிரியரின் இச் செயல் அரசு பள்ளி மீது தவறான கண்ணோட்டத்தில் பொதுமக்கள் பார்ப்பதற்கான வாய்ப்பாக அமைந்துவிட்டது. 


Full View


Tags:    

Similar News