"நம் நாடு முன்னிலை வகிக்க நாம் கல்வி முறைகளில் மாற்றம் கொண்டு வரவேண்டும்" - ஆளுநர் சூசகமாக எதனை குறிக்கிறார்?
"மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையானவர்களாக இருக்க வேண்டும்" என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நேற்று நடைபெற்ற துணை வேந்தர்கள் மாநாட்டில் கூறியுள்ளார்.
இந்தியா கடந்த எட்டு ஆண்டுகளாக அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பாதையை எட்டி வருகிறது. அண்டை நாடுகள் சில பொருளாதார வீழ்ச்சி அடைந்த போதிலும், இந்தியாவின் பொருளாதாரம் தலை நிமிர்ந்து பொற்காலத்தின் நோக்கி சென்று வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் எதிர்காலம் நன்றாக இருந்தாலும். நம் நாட்டின் எதிர் வரக்கூடிய தலைமுறைகளின் எதிர்காலம் நன்றாக இருத்தல் அவசியம். அதற்கு சிறப்பான கல்வி முறையில் வரக்கூடிய தலைமுறையினர் கல்வி பயில்வது மிகவும் அவசியம்.
இதை கருத்தில் கொண்டு, நேற்று ஊட்டி ராஜ்பவனில் நடைபெற்ற, துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி பேசுகையில் : தற்போது நாடு வளர்ந்துவரும் சூழ்நிலைக்கு ஏற்ப கல்விமுறையில் மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும். 2047-ல் இந்தியா சர்வதேச அளவில் முன்னிலை வகிக்க கல்விமுறைகளில் மாற்றங்கள் தேவை. அதற்கான திட்டமிடுதலில் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் ஈடுபட வேண்டும்.
இந்திய அளவில் 70 சதவிகித மாணவர்கள் கலை அறிவியல் பாடங்களையே படித்துவருகின்றனர். மாணவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்து வெளிவரும்போது திறமையானவர்களாக இருக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள் பன்முகத்திறன்கொண்ட மாணவர்களை உருவாக்குவது கடமை. அதற்கான வாய்ப்புகளைப் பல்கலைக்கழகங்கள் கட்டமைக்க வேண்டும்"
என்று ஆளுநர் துணை வேந்தர்களுக்கு அறிவுறுத்தினார்.