அம்மன் ஆலய நிலத்தில் அமைக்கப்பட்ட மீன்கடை - இந்து முன்னணி எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து அகற்றம்!
ராமநாதபுரம் மாவட்டம், பெரியபட்டினம் அழகு நாயகி அம்மன் ஆலய நிலத்தில் திமுக அரசு சார்பில் மீன் கடை ஒன்று அமைக்கப்பட்டது. இந்த சம்பவம் இந்து மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகளுக்கு தகவல் சென்றது. அவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு எச்சரிக்கை செய்தனர். இல்லை என்றால் மிகப்பெரிய போராட்டம் நடைபெறும் என்றனர்.
இந்நிலையில், அழகு நாயகி அம்மன் ஆலய நிலத்தில் அமைக்கப்பட்ட மீன் கடை அகற்றப்பட்டது. இந்த சம்பவத்திற்கு இந்து முக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக இது போன்ற கடைகளை அமைப்பதை இனிமேல் நிறுத்த வேண்டும் என்ற எச்சரிக்கையும் இந்து முன்னணி சார்பாக வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்த பின்னர் இந்து கோயில்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவது, அல்லது சட்டவிரோதமாக கோயில் கட்டப்பட்டுள்ளது என்ற காரணத்தை காட்டி இடித்து தரைமட்டமாக்குவது போன்ற செயல்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
Source, Image Courtesy: Twiter