கோயில் மண்டபத்தை இடிக்க முயற்சி செய்த நெடுஞ்சாலைத்துறையை தடுத்து நிறுத்திய சென்னை உயர்நீதிமன்றம்! எப்படி?
"சாலைப் பணிகள் தொடங்குவதற்கு முன்பே, கோயில் மண்டபம் எழுப்பப்பட்டுவிட்டது" என்று கோயில் மண்டபம் இடிப்பது குறித்த வழக்கு விசாரணையில் சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழகத்தில் பல இடங்களில், இந்துக் கோயில்கள் ' பொது நிலத்தில் இருக்கின்றது ' என்று இடிக்கப்பட்டு வருகின்ற நிகழ்வு தொடர்ந்து வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் அருள்மிகு பெரியநாயகி அம்மன் திருக்கோயிலுக்கு சொந்தமான 'கங்கைகொண்டான்' என்ற கோயில் மண்டபம் இருந்துவருகிறது. எந்த ஒரு சாலை பணிகளும் அம் மண்டபம் எழுப்பப்படும் போது நடைபெறவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் நெடுஞ்சாலைத்துறை, சாலை பணிகளுக்காக மண்டபத்தை இடிக்க போவதாக முடிவெடுத்தது, பின்பு நெடுஞ்சாலைத்துறையின் "மண்டபம் இடிக்கும்" முடிவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு, உயர் நீதிமன்ற அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த அமர்வு " கோயில் மண்டபம், எந்த ஒரு சாலை பணிகளும் நடைபெறும் முன்பே எழுப்பப்பட்டுவிட்டது." என்று கூறி நெடுஞ்சாலைத் துறையின் கோயில் மண்டபம் இடிக்கும் முயற்சியை தடுத்து நிறுத்தியது.
மேலும், " கோயில் மண்டபத்தை இடிக்கா வண்ணம் சாலையை மாற்றி அமையுங்கள் அல்லது கோவில் நிலத்தை சட்டப்படி கையகப்படுத்துங்கள்" என்று நெடுஞ்சாலை துறைக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.