தில்லை நடராஜப் பெருமானின் ஸ்தல வரலாற்றை, ஆபாசமாக திரித்து வீடியோ வெளியிட்ட "யூடூ பூரூட்டஸ்" என்ற யூடியூப் சேனலின் அந்தக் குறிப்பிட்ட வீடியோ தற்போது முடக்கப்பட்டுள்ளது.
திராவிட மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்ட 'யூ டூ புரூட்டஸ்' என்ற யூடியூப் சேனல் வாயிலாக, சிதம்பரம் நடராஜர் பெருமான் குறித்து தவறாகவும், இழிவுபடுத்தியும், ஆபாசமாகவும் வீடியோ வெளியிட்டார் அச் சேனலின் நிர்வாகி 'மைனர் விஜய்' என்பவர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரத் தொடங்கிற்று. அரசியல் தலைவர்கள், சிவனடியார்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், இந்துமத உணர்வார்கள் என அனைத்து தரப்பட்ட மக்களும் "'யூடூ புரூட்டஸ்' யூடியூப் சேனல் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கோரிக்கை எழுப்பி வந்தனர்.
இந்நிலையில் இன்று, அந்த குறிப்பிட்ட வீடியோ தற்போது முடக்கப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பட்ட மக்களிடமிருந்தும் எழுந்த கண்டனக்குரல்களால் வேறு வழியின்றி, அரசின் நடவடிக்கைகளால் அந்த வீடியோ முடக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் அந்த காணொளியில் சிவபெருமானே ஆபாசமாக திரித்து பேசிய அந்த யூடியூபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா? என்பது ஒரு மிகப்பெரிய கேள்விக்குறியாகும்.