ஸ்ரீரங்கநாதர் கோயில் நிர்வாகத்தில் முறைகேடு - ம.தி.மு.க. ஆர்பாட்டம் நடத்துவது ஏன்?
ஸ்ரீரங்கநாதர கோயில் நிர்வாகத்தில் பல முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாகவும், கோயிலை அறநிலையத்துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது.
பொன்னேரி அருகே உள்ளது தேவதானம் என்ற கிராமம். அந்த கிராமத்தில் சுமார் 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ரங்கநாதர் கோயில் உள்ளது. இதனை வட ஸ்ரீரங்கநாதர் என்றும் அழைக்கின்றனர். இந்த கோயிலில் சயன கோலத்தில் காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். திருவிழாவின் போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். இதற்கிடையில் கோயில் நிர்வாகத்தில் தனி நபர்கள் தூண்டுதலால் சில அத்துமீறல்கள் நடைபெறுவதாகவும், ஏராளமான முறைகேடுகள் நடக்கிறது. மேலும், உள்ளூர் மக்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த நிர்வாகத்தை கண்டித்து உடனடியாக இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ம.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் துணை பொது செயலாளர் மல்லை சத்யா பங்கேற்றார். இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். மேலும், கோயில் நிலத்தை குத்தகைக்கு விட்ட பின்னர் அதற்கான ரசீதுகளை கொடுப்பதில்லை. கோயில் நிலங்களை மீட்க வேண்டும். குறிப்பாக கிராம மக்களுக்கு தரிசனம் செய்ய முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
Source, Image Courtesy: Dinamalar