'மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதே தேச விரோதம்' - துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி

Update: 2022-05-09 09:20 GMT

துக்ளக் 52வது ஆண்டு விழாவில் அந்த இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியதாவது: மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதே தேச விரோதம். சட்டம், நீதி போன்ற அம்சங்கள் தி.மு.க.வுக்கு இல்லை. என்றுமே ஆன்மீகம் தான் தி.மு.க.வுக்கு முதல் எதிரி. அவர்களின் ஆட்சிக்காலத்தில் நாத்திகர் வேடத்தில் ஆத்திகர்கள் வருகின்றனர். அப்படி வருபவர்களால் தான் ஆபத்து அதிகமாக இருக்கும்.

மேலும், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையால் பல்வேறு மாநில பிரச்சனைகள் தீர்க்கப்படுகிறது. எனவே அவர் என்றாவது ஒருநாள் தமிழகத்தின் தலைவராக இருப்பார்.

மேலும், கருணாநிதி இயற்கையான தலைவர். தமிழக அரசியலை ஒரேயடியாகத் திருப்பியும் போட்டுள்ளார். அந்த அளவிற்கு விவரம் தெரிந்தவர். அதே நேரத்தில் கருணாநிதி மட்டும் இந்தி படித்திருந்தால் மொத்த இந்தியாவும் ஆபத்தில் இருந்திருக்கும். எம்.ஜி.ஆரால் தான் தமிழகம் பிழைத்தது. அ.தி.மு.க. 33 ஆண்டுகளாக ஆட்சி செய்யாமல் இருந்திருந்தால் தமிழகம் காடாக மாறியிருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Source:dhinasari

Image Courtesy: Twiter

Tags:    

Similar News