அ.தி.மு.க தொடங்கிய கர்ப்பிணி, குழந்தைகள் பரிசு பெட்டகம் என்னாச்சு? திட்டத்தை கை கழுவியதா தி.மு.க. அரசு!

Update: 2022-05-11 11:52 GMT

கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் கர்ப்பிணிகளுக்காக ஊட்டச்சத்து மிகுந்த பெட்டகம், குழந்தை பிறந்த பின்னர் வழங்கப்படும் தாய், சேய் நல பரிசு பெட்டகம் உள்ளிட்டவைகளை தொடங்கி வைத்தார்.

தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்த இரண்டு திட்டங்களையும் கடந்த டிசம்பர் மாதம் முதல் செயல்படுத்தப்படவில்லை. அதாவது அரசு மருத்துவமனை மற்றும நகர்ப்புற, ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து மாவு ஒரு கிலோ, ஊட்டச்சத்து பாட்டில் திரவம், பேரீச்சம்பழம், புரதசத்து பிஸ்கட், ஆவின்நெய், குடற்புழு நீக்க மாத்திரை, பருத்தி துண்டு, டப்பா வீதம் 2 முறை வழங்கப்பட்டது.

இத்திட்டம் துவக்க காரணமே, தாய்க்கு ஊட்டச்சத்து குறைந்தால் ரத்தசோகை ஏற்பட்டு பிறக்கும் குழந்தைகளின் எடை குறைவாக இருக்கும் என்பதாலேயே திட்டம் துவக்கப்பட்டது. மேலும், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அரசு அமைந்த பின்னர் இத்திட்டம் முழுவதையும் கைகழுவிதாக பொதுக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News