ராஜீவ் காந்திக்கு நடந்தது கருணாநிதிக்கு நடந்திருந்தால் குற்றவாளியை ஸ்டாலின் கட்டிப்பிடிப்பாரா? முன்னாள் ஏ.டி.எஸ்.பி. அனுசியா கேள்வி!

Update: 2022-05-21 06:18 GMT

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளி பேரறிவாளன் சமீபத்தில் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையாகி வெளியில் வந்ததும் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்தார். அப்போது அவரை ஸ்டாலின் கட்டியணைத்தார். இந்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் பேசும்பொருளாக மாறியது. அதாவது இந்திய நாட்டின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை படுகொலை செய்த ஒரு குற்றவாளியை ஒரு முதலமைச்சர் எப்படி கட்டியணைக்கலாம் என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனை வடஇந்திய மற்றும் ஆங்கில ஊடகங்களும் கேள்வி எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிரச்சாரத்தின்போது பாதுகாப்பு பணியில் இருந்து ஏ.டி.எஸ்.பி. அனுசியா பரபரப்பான பேட்டி ஒன்று அளித்துள்ளார். நாட்டு பிரதமரோடு இருந்து அடிப்பட்டு கை எல்லாமே போச்சி, ஆனால் எங்களுக்கு இதுவரைக்கும் ஒரு ஆறுதல் கூட சொல்லவில்லை. அந்த வேதனையை பகிர்ந்தது கூட இல்லை. உடனே முதலமைச்சர் கிட்ட போய் நாங்க ரொம்ப கஷ்டப்படுகிறோம் என்று சொன்னால் எனது போன் எடுத்து பேசுவாரா ஸ்டாலின், அல்லது ஆறுதலை சொல்வாரா என்று எனக்கு தெரியவில்லை. இன்றுடன் 31 ஆண்டு ஆகியிருக்கு இன்றுவரை முதலமைச்சர் அல்லது, சோனியா காந்தி கூட ஆறுதல் சொல்லவில்லை. ஒரு சாதாரண மக்கள் முதலமைச்சரை பார்க்க வேண்டும் என்றால், ஏன், எதற்கு என்ற கேள்வி எல்லாம் கேட்பார்கள் போலீஸ். அப்படி யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

ஆனால் பேரறிவாளன் அம்மா அற்புதம்மாள் முதலமைச்சருக்கு ஒரு போன் பன்னால் உடனடியாக எடுத்து பேசுகின்றார். அது பற்றி வீடியோ இணையத்தில் பகிரப்படுகிறது. அதே மாதிரி பேரறிவாளனை ஆறத்தழுவி கட்டிப்பிடிக்கிறார். ஒரு வேளை முதலமைச்சர் ஸ்டாலின் வீட்டில், மகனோ, மனைவியோ, அல்லது கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது எல்.டி.டி. படுகொலை செய்திருந்து, அவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்து கட்டிப்பிடிப்பாரா என்பது எனக்கு தெரியவில்லை. ஒரு குற்றவாளியை கட்டிப்பிடித்த செயல் வெட்கக்கேடானது. இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Twiter

Tags:    

Similar News