பல்லக்கில் சென்று மயிலை ஆதீனம் வழிபாடு!

Update: 2022-05-21 09:00 GMT

மயிலாடுதுறை தருமபுரத்தில் 16ம் நூற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.

அக்கோயிலில் ஆண்டு பெருவிழாவின் 10ம் நாளான இன்று காலை, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சவாரி பல்லக்கில் எழுந்தருளி, குரு மூகூர்த்தத்தில் வழிபாடு நடத்தினார்.

மேலும், 11ம் நாளில் தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருள, வீதி உலா வருகின்ற பிரசித்தி பெற்ற பட்டனப்பிரவேசம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து ஞானக்கொலு காட்சியும் நடைபெறுகிறது. இதனை காண்பதற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: Twiter

Tags:    

Similar News