உடல்நலக் குறைபாடுள்ள கோவில் காவலரை காலால் உதைக்கும் கோயில் கணக்கர்! ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் அதிகாரிகள் அராஜகம்!

Update: 2022-05-21 13:29 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருத்தலத்தில் பணிபுரியும் காவலரை, கோயில் கணக்கர் காலால் உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், காவலராக பணிபுரிந்து வருபவர் 'கர்ணன்' என்பவர். இயல்பிலேயே உடல்நலக் குறைவாக இருக்கும் இவர், 10 ஆண்டுகளுக்கும் மேலாக அக்கோயிலில் பணிபுரிந்து வருகிறார்.


"கோயில் அதிகாரிகள் கோயிலில் பணிபுரியும் ஊழியர்களை பணிச்சுமைக்கு ஆளாக்கின்றனர்" என்ற குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இப்படியிருக்க, காவலாளி கர்ணனுக்கு, செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் கடுமையான பணிச்சுமைத் தருவதாகக் கூறப்படுகிறது. கர்ணனுக்கு தொடர்ந்து பணிச்சுமை அளிப்பதும் அவரது உடல்நிலை குறைவை கருதாமல், அவருக்கு இரவு நேர பணிகளை வழங்குவதுமாக அதிகாரிகள் துன்புறுத்தினர்.


இதன் தொடர்ச்சியாக, காவலர் கர்ணனை கோயிலின்  ஒரு இடத்திலுள்ள நாற்காலியை, இன்னொரு இடத்திற்கு மாற்ற கோயில் கணக்கர்  கட்டளையிட்டு,  அதற்காக கர்ணனை கோயில் கணக்கர் காலால் உதைக்கும் சம்பவம்  சிசிடிவி காட்சிகளாக   பதிவாகியுள்ளது.




 

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கர்ணன் தற்போது அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Vikatan

Similar News