பெரியார் படிப்பகத்தில் பேரறிவாளன் விடுதலையைக் கொண்டாடும் விதமாக மாட்டிறைச்சி விருந்தா?

Update: 2022-05-21 15:27 GMT

கோவை: மாட்டிறைச்சி விருந்து நிகழ்வை தடை விதிக்கக்கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளனர்.


ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி, 30 ஆண்டுகள் சிறையில் இருந்து பேரறிவாளன் சமீபத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பால் விடுதலையானார். இவரது விடுதலையை பலர் கொண்டாடியும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக  தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பேரறிவாளனை ஆரத்தழுவி வரவேற்றார்.


"பேரறிவாளன் ஒன்றும் விடுதலைப் போராட்ட வீரர் அல்ல, அவர்  பிரதமரை கொன்ற குற்றத்திற்காக சிறை தண்டனை அனுபவித்து விடுதலையாகியுள்ளார். ஆகையால் அவரை  தமிழக முதல்வர்  ஆரத்தழுவி வரவேற்றிருக்கக்கூடாது" என்று ராஜீவ் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்கள், காங்கிரஸ்காரர்கள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் போன்றறோர்  தமிழக முதல்வரின் செயலை விமர்சித்து வருகின்றனர்.


இந்நிலையில், சமூக வலைதளங்களில் கோவை பெரியார் படிப்பகத்தில், பேரறிவாளனின் விடுதலையைக் கொண்டாடும் விதமாக, மாட்டிறைச்சி பிரியாணி விருந்து நடைபெறப் போவதாக தகவல் வெளியாகின. ஆகையால் அந்த நிகழ்வை தடை விதிக்கக்கோரி, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கோவை மாநகர காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.


மனுவில்  "இந்துக்கள் மனதை புண்படுத்தும் வகையில் இந்த மாட்டிறைச்சி  விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விருந்து கோவையின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும். ஆதனால் இந்த விருந்துக்கு தடைவிதிக்க வேண்டும்." என்று கூறப்பட்டுள்ளது.

DINAMANI

Similar News