மும்பையில் எஸ்.ஐ., கணவர்: தமிழகத்தில் கஞ்சா வியாபாரி: போலீசாரிடம் சிக்கியது எப்படி!

Update: 2022-05-22 13:02 GMT

தமிழகத்தில் கஞ்சா வியாபாரம், மும்பையில் தொழில் அதிபர் மற்றும் எஸ்.ஐ. கணவராக சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்த நபர் தனது கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளையில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக அம்மாவட்ட எஸ்.பி., ஹரி கிரண் பிரசாத் தனிப்படை அமைத்து அதிரடியான உத்தரவை பிறப்பித்தார். இதனை தொடர்ந்து தனிப்படை போலீசார் சம்பவத்தன்று தக்கலை, அழகிய மண்டபம் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் மேற்கொண்டு வந்தனர். அப்போது மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் பதில் கூறியதால் போலீசார் காரை சோதனை செய்தனர். அப்போது காரில் சுமார் 4 கிலோவுக்கு அதிகமான கஞ்சா இருப்பதை பறிமுதல் செய்தனர்.

அவர்களை காவல் நிலையம் அழைத்துக்கொண்டு விசாரணை செய்ததில், திருவிதாங்கோடு செல்வின் மற்றும் மனோஜ் என்பது தெரியவந்துது. அவர்களிடம் நடத்தப்பட்டவ விசாரணையில் மும்பையில் பாஷா படத்தில் இருப்பது போன்று இரண்டு வாழ்க்கை வாழ்ந்து வந்துள்ளனர். அதாவது மும்பையில் செல்வின் ஜிம்மில் பயிற்சியாளராக இருந்துள்ளார். அந்த ஜிம்முக்கு பெண் எஸ்.ஐ. வந்தபோது அவருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, கஞ்சா குற்றவாளிகளுடன் தொடர்பு ஏற்படுத்தி அங்கிருந்து வாங்கிக்கொண்டு கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் மும்பையில் சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தன்னை தொழிலதிபர் போன்று காட்டிகொண்டு இருந்துள்ளார். தமிழகத்தில் கஞ்சா வியாபாரியாக வலம் வந்த நிலையில் தற்போது போலீசாரிடம் பிடிப்பட்டுள்ளார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும், கஞ்சா கடத்தலுக்கு உதவிய பெண் எஸ்.ஐ.விடம் போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என கூறப்படுகிறது.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News