நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கைது செய்யக்கோரி களத்தில் இறங்கிய சிவனடியார்கள் - சிதம்பரத்தில் குவிந்த கூட்டம்
சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கைது செய்யக்கோரி 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் ஒன்றுகூடி தி.மு.க. அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சமீபகாலமாக தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் இந்து கடவுள்களை இழிவுப்படுத்தும் யூடியூபர்கள் அதிகரித்து வருகின்றனர். அந்த வகையில் யூடியூபர் மைனர் விஜய் என்பவர் சிதம்பரம் நடராஜர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து வெளியிட்டிருந்தார். இது ஒட்டுமொத்த சிவனடியார்களையும் காயப்படுத்தும் விதமாக அமைந்தது.
#LIVE | சிதம்பரம் நடராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்#Chidambaram | #Nadarajar pic.twitter.com/nanfQac8CI
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 23, 2022
இதனை கண்டிக்கும் விதமாக சிதம்பரம் நகரத்தில் அனைத்து சிவனடியார்களும் ஒன்றுகூடினர். அவமரியாதையாக பேசிய யூடியூபரை கைது செய்யாத தி.மு.க. அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர். இதில் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பு தலைவர்கள் பலர் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர். ஒரே நேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கூடியதால் சிதம்பரம் நகரமே ஸ்தம்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Source: News 18 Tamilnadu
Image Courtesy:Nakkheeran