மேட்டூர் அணை முன்கூட்டியே திறப்பு: கட்டுமான பணிகளால் தண்ணீர் வீணாகும் அபாயம்!
டெல்டா பகுதி ஆறுகளில் நடைபெறும் கட்டுமான பணிகளால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வீணாகும் அபாயம் ஏற்பட்டிருப்பதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பதால், நேற்று (மே 24) முதலமைச்சர் ஸ்டாலின் அணையில் இருந்து பாசனத்திற்கு முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்டார். தற்போது தண்ணீர் திறப்பு விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. அதன்படி கல்லணையில் இருந்து, டெல்டா பாசனத்துக்கு, 26 அல்லது 27ம் தேதி தண்ணீர் திறக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய்களில் 80 கோடி ரூபாய் செலவில் தூர்வாரும் பணிகள் நடைபெறுகிறது.
இதில் கரைகளை பலப்படுத்துதல், பாலங்கள் கட்டுமானப் பணிகள் பாதிப்படையும். தற்போது பணிகள் நடைபெறும் இடங்களில் கரைகள் பலம் இல்லாத சூழலில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக அதிகமான வாய்ப்புகள் இருப்பதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
Source, Image Courtesy: Dinamalar