தருமபுரி: ஆக்கிரமிப்பு செய்த கோயில் நிலத்தை மீட்க அதிகாரிகள் தயக்கம்!

Update: 2022-05-26 07:25 GMT

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே உள்ளது பனைக்குளம். அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு ஒரே குடும்பத்தை சேர்ந்த பங்காளிகள் ஒன்றாக சேர்ந்து முன்னோர் காலத்தில் இருந்து அப்பகுதியில் பழனியாண்டவர் கோயில் ஒன்றை கட்டி வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அக்கோயில் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது என கூறப்படுகிறது. அக்கோயிலில் ஆண்டு தோறும் விஷேச நாட்களில் திருவிழா மிக பிரமாண்டமாக நடைபெறும். அது மட்டுமின்றி பௌர்ணமி நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

இதனிடையே கிராமத்தின் மத்தியில் கோயில் அமைந்திருப்பதால், கோயில் அருகாமையில் இருப்பவர்கள் ஆக்கிரமித்து வீடுகளை கட்டியுள்ளனர். இக்கோயிலுக்கு சொந்தமான நிலம் எவ்வளவு இருக்கின்றது என்பது யாருக்கும் தெரியாது. இதன் பின்னர் கோயில் அறங்காவலர்கள் ஆக்கிரமிப்பு செய்த நிலத்தை கேட்க சென்றால் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்நிலையில், கோயிலுக்கு சொந்தமான இடம் பற்றிய மூலப் பத்திரத்தை தேடி பார்த்துள்ளனர். அதில் 4 சென்ட் நிலம் கோயிலுக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு செய்தவர்களிடம் இருந்து நிலத்தை மீட்டுக்கொடுக்கும்படி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் அறங்காவலர்கள் புகார் அளித்தனர். ஆனால் போலீசார் இதில் தலையிட முடியாது என்று கூறியுள்ளனர். இதன் பின்னர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நிலத்தை மீட்டுக்கொடுக்கும்படி புகார் மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோயில் அறங்காவலர் மற்றும் பங்காளிகள் கூறியுள்ளனர்.

Source, Image Courtesy: Samayam

Tags:    

Similar News