அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு தடை!

Update: 2022-06-07 23:46 GMT

வருகின்ற கல்வியாண்டு முதல் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகள் நடைபெறாது என்று பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அரசு பள்ளி மாணவர்களை கவர்கின்ற வகையிலும், ஆங்கிலவழிக்கல்வியை ஊக்குவிக்கும் வகையிலும் புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. இதனால் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளில் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை சேர்த்தனர். தனியார் பள்ளிகளில் சேர்ந்து படித்தால் அதிகளவில் கட்டணம் கட்ட வேண்டும், ஆனால் அரசு பள்ளியில் இலவசமாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு அதிகரிக்க தொடங்கியது.

இந்நிலையில், வருகின்ற கல்வியாண்டு முதல் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாது என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. இதற்காக பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களும், அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறுகையில், அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் நடத்தப்படும். அரசுப்பள்ளியில் செயல்பட்டு வந்த இந்த வகுப்புகள் தற்போது அங்கன்வாடி மையங்களில் நடைபெறும் என கூறியுள்ளார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News