ரேஷன் கடை ஊழியர்கள் காலவரையற்ற போராட்ட அறிவிப்பு - 'ஒரு வாரம் டைம் கொடுங்க' என கெஞ்சும் தி.மு.க அரசு!
தமிழகம் முழுவதும் வருகின்ற 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக நியாய விலைக்கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தால் அரசு ஊழியர்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியிருந்தது. அதன்படி தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் அரசு ஊழியர்களை கண்டுகொள்ளவில்லை என்ற செய்திகள் அடிக்கடி வெளியாகி வருவதை பார்க்க முடிகிறது. போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
காலவரையற்ற போராட்ட அறிவிப்பு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைhttps://t.co/WciCN2SQmv | #TNGovt | @r_sakkarapani | @arivalayam | #RationStore pic.twitter.com/rtrSyXntQU
— News7 Tamil (@news7tamil) June 10, 2022
இந்நிலையில், வருகின்ற ஜூன் 13ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக நியாய விலைக்கடை ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இதனால் பல லட்சம் குடும்பங்கள் ரேஷன் கடையில் வழங்கப்படும் பொருட்களை நம்பி உள்ளனர். ஆனால் ஊழியர்கள் தற்போது தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசைக் கண்டித்து போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே விரைவில் மாற்று ஏற்பாடுகளை தி.மு.க. அரசு செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Source: News 7 Tamil
Image Courtesy: The New Indian Express