அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் ஒரு ஆண்டு மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை அதிரடி!
தமிழகத்தில் மலைகள் அதிகமாக உள்ள மாவட்டங்களில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் கட்டாயமாக ஒரு வருடத்திற்கு மலைப்பகுதியில் பணியாற்ற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதன்படி ஈரோடு, தேனி, சேலம், வேலூர், திண்டுக்கல், திருப்பத்தூர், தருமபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இந்த உத்தரவு அமல்படுத்தப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மலைப்பகுதியில் பணியாற்றும் ஆசிரியர்கள் தயங்குவதால், மலையின் மேல் பகுதியில் உள்ள மாணவர்கள் பயன்பெறுகின்ற வகையில் இந்த அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Polimer