முதியவரின் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 'சர்ச்' இடித்து தள்ளிய சென்னை மாநகராட்சி!

Update: 2022-06-19 13:00 GMT

சென்னை பாலவாக்கத்தில் 87 வயது மதிக்கத்தக்க முதியவருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து அந்த இடத்தில் சர்ச் உள்ளிட்ட கட்டுமானங்களை இடித்து தள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து அதனை சென்னை மாநகராட்சி நிர்வாகம் இடித்து தள்ளியது.

சென்னை, கிழக்கு கடற்கரை சாலையை சேர்ந்தவர் ஈஸ்வரா 87, இவரது சகோதரர் பாலவாக்கத்தில் ஒரு இடத்தை கடந்த 1960ம் ஆண்டு வாங்கினார். சில ஆண்டுகளில் அவர் இறந்து விட்டார். அவரின் சட்டப்பூர்வமான வாரிசாக ஈஸ்வரா இருக்கின்றார். அந்த இடத்தில் 1,700 சதுர அடி இடத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்து அங்கு தனசேகரன், பால் மோசஸ் என்பவர்கள் சர்ச் கட்டினர். இதனால் அதிர்ச்சியடைந்த ஈஸ்வரா சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அனுமதி இன்றி சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டுமானங்களை 4 வாரங்களில் அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து இடத்தை ஆக்கிரமித்தவர்களுக்கு சென்னை மாநகராட்சியின் பெருங்குடி மண்டலம் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இந்நிலையில், மாநகராட்சியின் பெருங்குடி மண்டல பொறுப்பு உதவிக் கமிஷனர் முரளி தலைமையில் பலத்த போலீசார் பாதுகாப்புடன், முறைகேடாக கட்டப்பட்ட சர்ச் பொக்லைன் உதவியுடன் அகற்றும் பணி நேற்று (ஜூன் 18) துவங்கியது. அதன்படி சர்ச் மதில்சுவர் உள்ளிட்டவை அகற்ற வந்த நிலையில், மின் மோட்டார், மின் விசிறி உள்ளிட்ட மின் சாதனப் பொருட்கள் இருக்கும் காரணத்தினால் தாங்களாகவே அகற்றுவதற்கு கால அவகாசம் கோரினர். இதனால் சர்ச் அகற்றும் பணியை சர்ச் நிர்வாகத்தினர் மேற்கொண்டனர். மறுபடியும் இன்று (ஜூன் 19) சர்ச் கட்டத்தை இடிக்கும் பணி தொடங்கும் என கூறப்பட்டுள்ளது.

Source: Dinamalar

Image Courtesy:The Herald Mail

Tags:    

Similar News