பொது பாதையில் கட்டப்பட்ட 'சர்ச்' சுவரை அகற்ற பேராயரிடம் மனு!

Update: 2022-06-19 13:01 GMT

பொது பாதையை ஆக்கிரமித்து சர்ச் நிர்வாகம் கட்டியுள்ள சுவரை அகற்ற வலியுறுத்தி திண்டிவனம் பகுதி மக்கள் பேராயரை சந்தித்து மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சிக்கு உட்பட்ட இருதயபுரத்தில் 80 குடும்பத்தை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் அங்கு 40 ஆண்டுகளுக்கும் மேலாக வசிப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் அருகாமையில் உள்ள சர்ச் நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தை பொது பாதையாக பயன்படுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தற்போதுள்ள சர்ச் நிர்வாகம் தங்களின் இடத்தை சுற்றி மதில் சுவர் கட்டியுள்ளது. இதனால் இருதயபுரத்தில் வசித்து வந்த 80 குடும்பத்தினர் சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள செஞ்சி சாலைக்கு 2 கி.மீ. தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பொது பாதையை பயன்படுத்துவதற்கு மதில் சுவற்றை அகற்ற வலியுறுத்தி புதுச்சேரி பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட்டை சந்தித்து பொதுமக்கள் முறையிட்டுள்ளனர். பொது பாதையை சர்ச் நிர்வாகம் பொதுமக்களுக்கு திறந்து விடாமல் இப்படி மதில் சுவர் கட்டியிருப்பது அப்பகுதியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News