விழுப்புரம் அருகே இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக மயானப்பாதை அமைக்கும் பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புர் அருகே உள்ள கல்பட்டில் ஆதிதிராவிடர் சமூக மக்கள் மயானத்திற்கு இடவசதி செய்து கொடுக்க வேண்டும் என்று மனு அளித்து போராட்டங்கள் நடத்தினர். அதன் பின்னர் கடந்த 2020ம் ஆண்டு மயானத்திற்கு 40 சென்ட் நிலத்தை அரசு ஒதுக்கியது. தற்போது மயானத்திற்குச் செல்லும் பாதை தொடர்பாக இரண்டு தரப்பு மக்களிடையே பிரச்சனை ஏற்பட்டது.
இதற்கு மத்தியில் சில நாட்களுக்கு முன்னர் ஆர்.டி.ஓ., தலைமையில் அமைதிக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டு தீர்வு எட்டியது. இதனை தொடர்ந்து நேற்று (ஜூன் 28) மயானப் பாதை அமைக்கும் பணியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் பாதை அமைக்க அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு பிரிவை சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும், கிறிஸ்தவ தேவாலத்திற்கு சொந்தமான இடத்துக்கு மையத்தில் மயானப்பாதை அமைப்பதை தவிர்த்து அருகாமையில் அமைக்கவும் வலியுறுத்தினர். இது பற்றி தகவல் அறிந்த போலீசார் இரண்டு தரப்பினர் மத்தியிலும் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மயானப்பாதை அமைக்கும் பணியை பாதியில் நிறுத்திவிட்டு ஊழியர் திரும்பி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Dinamalar