தமிழ் கலாசாரத்தை பாதுகாப்பதற்கு மதமாற்ற தடை சட்டம் வேண்டும்: வேதாந்தம் வலியுறுத்தல்!
நமது தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாட்டை பாதுகாப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியா மதமாற்ற தடை சட்டத்தை கொண்டு வர வேண்டும் என்று தமிழக விஸ்வ இந்து பரிஷத் நிறுவன தலைவர் வேதாந்தம் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று (ஜூலை 1) ராமேஸ்வரத்தில் கூறியதாவது: ஜாதி மதம் பார்க்காமல் அனைத்து கிராமத்தில் உள்ள கோயில் பூஜாரிகளுக்கும் 15 நாட்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருத மந்திரத்தில் பூஜை செய்வதற்கு பயிற்சி அளித்து, பூணூல் அணிவிக்கப்படுகிறது. இதன் பின்னர் அவர்கள் அனைவரும் கோயில்களில் பூஜை, அபிஷேகம் செய்வதற்கு முழுத்தகுதி பெற்று விடுகின்றனர்.
மேலும், தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கொடுத்த மாதிரி பூஜாரிகளுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.2,000 வழங்க வேண்டும். ஆனால் தற்போது வரையில் அது போன்ற அறிவிப்புகளை வழங்கவில்லை. அதே போன்று தமிழ் கலாசாரம் மற்றும் பண்பாடு உள்ளிட்டவைகளை பாதுகாக்க முதலமைச்சர் உறுதுணையாக இருக்க வேண்டும். பிற மதத்தில் இருப்பவர்கள் தங்களை தமிழர் என்று சொல்வதில்லை. மேலும், வங்கதேசம், ஜம்மு காஷ்மீரில் இருந்து ஊடுருவும் மக்களை தடுப்பதற்கு குடியுரிமை சட்டம், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source, Image Courtesy: Dinamalar