இனிமேல் வரி பற்றி கவலையில்லை: உள்ளீட்டு வரி விதிமுறையில் மாற்றம்!

Update: 2022-07-04 13:36 GMT

ஜி.எஸ்.டி.யில் உள்ளீட்டு வரியை திருப்பி அளிக்கும் விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்படுவது, திருப்பூர் சாய ஆலை, ஜவுளி உற்பத்தி துறையினருக்கு பலனளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

மூலப்பொருளை அதிக வரி செலுத்தி கொள்முதல் செய்து நிறைவுற்ற பொருளை குறைந்த வரி விகிதத்தில் விற்பனை செய்யும் நிறுவனங்களால், உள்ளீட்டு வரியை முழுமையாக கழித்துக்கொள்ள முடிவதில்லை. இதனால் நிறுவனங்களின் தொகை அரசிடம் தேங்கிவிடுகிறது. இது போன்ற நிறுவனங்களுக்கு தேக்கமடையும் வரியை அரசு திருப்பி அளித்து வருகிறது.

மேலும், வரியை திருப்பி அளிப்பதில், மூலப்பொருளுக்காக செலுத்திய வரி மட்டுமே கணக்கிடப்படுகிறது. சேவைகளுக்காக செலுத்துகின்ற வரி சேர்க்கப்படுவதில்லை. இந்த விதிமுறையால் திருப்பூரில் உள்ள சாய ஆலைகள், கழிவுநீர் சுத்திகரிப்புக்காக பொது சுத்திகரிப்பு மையங்களுக்கு செலுத்தும் வரியை திரும்ப பெறமுடியாமல் தவித்து வருகிறது. இது தொடர்பாக திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு, மத்திய அரசுக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலுக்கும் தொடர் கோரிக்கை அளித்து வந்தது. அதன்படி இந்த கோரிக்கையானது 47வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News