பெண் குழந்தைகள் கடத்தல் அதிகரிப்பு - இலங்கை அகதிகள் பகீர் புகார்

Update: 2022-07-06 10:39 GMT

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கும் சூழலில் பெண் குழந்தைகள் கடத்தல் அதிகரித்திருப்பதால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளதாக ராமநாதபுரம் மாவட்டம், தனுஷ்கோடிக்கு தப்பி வந்த அகதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இலங்கை, யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையை சேர்ந்த 18 மாத குழந்தை முதல் பெரியவர்கள் ஆண், பெண் என்று 8 பேர் கள்ளப்படகில் தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்களிடம் மரைன் போலீசார் விசாரணை நடத்திய பின்னர் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் தற்போது நிலவி வரும் விவகாரம் பற்றி பெண் சசிகலா கூறும்போது: இலங்கையில் இரண்டு வேளை உணவுக்கே மக்கள் திண்டாட்டமாக உள்ளனர். பலர் வேலை இன்றி உணவுக்கூட கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த சூழலில் 6 முதல் 8 வயதுடைய பெண் குழந்தைகள் மூன்று பேர் வரையில் மர்ம கும்பல் கடத்தி சென்றுள்ளது. இது பற்றி இலங்கை போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவர்களை யார் கடத்தியது என்ற நிலவரம் தெரியாமல் பெற்றோர்கள் அச்சத்தில் வாடி வருகின்றனர்.

மேலும், பொருளாதார நெருக்கடியை பயன்படுத்தி பெண் குழந்தைகளை பல இடங்களில் மர்ம கும்பல் கடத்தி வருகிறது. இதனால் இலங்கையில் வாழ முடியாத சூழ்நிலையில் ஏராளமானோர்கள் தப்பி வெளிநாட்டிற்கு ஓடி வருகின்றனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News