கூகுள் பேயில் லஞ்சம்: டிஜிட்டலுக்கு மாறிய தமிழக வருவாய்த்துறை!

Update: 2022-07-06 10:39 GMT

கோவையில் பட்டா பெயர் மாறுதல் உள்ளிட்ட பணிகளுக்காக கூகுள் பேயில் லஞ்சம் வாங்கும் அளவுக்கு வருவாய்த்துறையினர் டிஜிட்டல் மயமாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் தொழில் வளர்ச்சி காரணமாக மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதால், கட்டுமானத் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் நிலத்தின் தேவையும், மதிப்பும் அதிகரித்து வருகிறது.

இதனால் நிலம் வாங்குவது மற்றும் விற்பனை செய்வது, பட்டா பெயர் மாற்றம் செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக பொதுமக்கள் வருவாய்த்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறையை தேடி வருகின்றனர். இது போன்ற சமயத்தில் அலுவலகங்களில் ஒவ்வொரு பணிகளுக்காகவும் குறிப்பிட்ட தொகையை லஞ்சமாக கேட்பதாக கூறப்படுகிறது. இவை காலம், காலமாகவே நடந்து வருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. இருந்தாலும் முன்பைவிட தற்போது லஞ்சம் அதிகமாகவே வாங்கப்படுகிறது.

அதிலும் பட்டா கொடுப்பதற்கும், பெயர் மாற்றம் செய்வதற்கும் தெரிந்தே லஞ்சம் வாங்கப்படுகிறது. இதற்காக எந்த ஒரு அதிகாரியும் நேரடியாக சென்று விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதில்லை. இதற்காக கீழ் நிலையில் பணியாற்றும் வி.ஏ.ஓ.க்கள், ஆர்.ஐ.க்கள் முதல் லஞ்சம் வாங்குவதற்கு பயப்படுவதில்லை.

மேலும், லஞ்சத்தை நேரடியாக வாங்காமல் கூகுள் பே மூலமாகவும் பொதுமக்களிடம் வருவாய்த்துறையினர் வாங்கி வருகின்றனர். இதற்காக மாவட்ட வருவாய்த்துறை டிஜிட்டல் மயமாக மாறியுள்ளது. இது பற்றிய ஆதாரங்களை வழங்கினாலும் எவ்வித அதிகாரிகள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு தமிழக அரசின் பதில் என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் பொதுமக்கள் எழுப்பியுள்ளனர்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News