அரசு மருத்துவமனையில் செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
திருப்பத்தூர்: செவிலியர்கள் சிகிச்சை அளித்ததால், சங்கரி என்ற கர்ப்பிணி பெண் உயிரிழந்த சம்பவம், தமிழக மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஓராண்டு காலமாக, அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்கேடு தலைவிரித்து ஆடுவதாக அனைத்துத் தரப்பு மக்களும் கருத்துக் கூறி வருகின்றனர். அதை உறுதி செய்வது போல், பல இடங்களில் பல அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில், மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால், சங்கரி என்ற கர்ப்பிணி பெண்ணிற்கு செவிலியர்களால் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்விளைவாக அப்பெண் உயிரிழந்தார்.
இச்செய்தி அறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனை முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து முற்றுகையை கைவிட்டனர்.
ஓராண்டு தி.மு.க ஆட்சி நிறைவடைந்ததை, விளம்பரங்கள் மூலம் மக்களிடம் போலி பிம்பத்தை உருவாக்கி வரும் தமிழக அரசு, இத்தகைய நிர்வாக சீர்கேடுகளை சரி செய்யாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.