காயத்துடன் சென்ற கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்து தரக்குறைவாக பேசிய அரசு மருத்துவர்!
திருப்புவனம் அரசு மருத்துவமனையில் காலில் அடிபட்டு சிகிச்சை பெறுவதற்கு சென்ற கர்ப்பிணிக்கு சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவர் பெண்ணை மிகவும் தரக்குறைவாக பேசியுள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு சுமார் 10 மணியளவில் கர்ப்பிணி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது பணியில் இருந்த மருத்துவர் பாலகிருஷ்ணன் முதல் உதவி சிகிச்சை அளிப்பதற்கு அங்குள்ள படுக்கையில் ஏறி படுக்குமாறு பெண்ணிடம் கூறியுள்ளார்.
அப்போது படுக்கை உயரமாக இருந்த காரத்தினால், கர்ப்பிணி அங்கிருந்த மர ஸ்டூலில் அமர முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர் ஸ்டூலை எட்டி உதைத்துள்ளார். இதில் கர்ப்பிணி கீழே விழுந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், மருத்துவரிடம் கர்ப்பிணியின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது, அவர்களையும் மிக தரக்குறைவான வார்த்தையில் பேசி வெளியே செல்லுங்கள் என மருத்துவர் கூறியுள்ளார். இது பற்றிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணியை எட்டி உதைத்த மருத்துவரின் பெயர் பாலகிருஷ்ணன் என்பதும் அவர் ஏற்கனவே மானாமதுரை மருத்துவமனையில் பணியாற்றியுள்ளார். அங்கு ஏதோ பிரச்சனை செய்த காரணத்தினால் திருப்புவனம் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Source, Image Courtesy: Polimer