இலங்கை கதி தமிழகத்திற்கும் ஏற்படும் - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை!

Update: 2022-07-12 11:02 GMT
இலங்கை கதி தமிழகத்திற்கும் ஏற்படும் - தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை!

ஆட்சியை பிடிப்பதற்காக இலவசங்களை அள்ளி வீசிகின்றனர். இது போன்றவை தொடரும் பட்சத்தில் இலங்கையை போன்று தமிழகத்திலும் பொருளாதார நெருக்கடி ஏற்படலாம் என்று தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கடுமையான எச்சரிக்கை செய்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறியிருப்பதாவது: நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்காகவும், தக்க வைப்பதற்காகவும் இலவசங்களை வாரி வழங்குகின்றனர். இது போன்ற நிலைமை தொடரும் பட்சத்தில் இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வரும்.

மேலும், பேட்டரியில் இயங்கும் டிராக்டரை அறிமுகப்படுத்த வேண்டும். உடனடியாக இயற்கை விவசாயத்திற்கு மாறக்கூடாது. இதனால் உணவுப்பஞ்சம் ஏற்படும் அபாயம் ஏற்படும். படிப்படியாக மாறுவதற்கு மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Source, Image Courtesy: Dinamalar

Tags:    

Similar News