மருத்துவக்கல்லூரியில் கோடிக்கணக்கில் பணமோசடி - திருவனந்தபுரம் சி.எஸ்.ஐ.எம்.எம். சர்ச்சில் சோதனை!

Update: 2022-07-25 11:17 GMT

மருத்துவக் கல்லூரியில் இடம் அளிப்பதாகக் கூறிக் கோடிக்கணக்கான பணத்தை வாங்கிய குற்றச்சாட்டில் திருவனந்தபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ.எம்.எம். சர்ச்சில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் காரக்கோணம் பகுதியில் சி.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அங்கு மருத்துவப் படிப்புக்கு இடம் அளிப்பதாகக் கூறி பலப்பேரிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளதாக புகார்கள் வந்தது. இதனடிப்படையில் இரண்டு காவல் நிலையங்களில் வழக்குகள பதியப்பட்டது. அதனை தொடர்ந்து தென்னிந்திய திருச்சபை தென்கேரளத் திருமண்டலத்தின் தலைமையிடமான எம்.எம்., சர்ச்சில், பேராயர் இல்லம் உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியான சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதே போன்று தேவாலயத்தின் செயலாளர் பிரவீன், காரக்கோணம் சி.எஸ்.ஐ., மருத்துவக் கல்லூரி இயக்குநர் பென்னட் ஆபிரகாம் உள்ளிட்டோரின் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கு பணம் பெற்று மோசடி செய்த சர்ச் செயலால் கிறிஸ்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Source, Image Courtesy: Polimer

Tags:    

Similar News