"பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட் சாப்பாட்டுல புழு" பீப் ரைஸ் சாப்பிட்ட போது வாடிக்கையாளர் அதிர்ச்சி!

Update: 2022-08-06 06:29 GMT

சென்னை: வாடிக்கையாளர் ஒருவர் தனியார் ஃபாஸ்ட் ஃபுட் உணவகத்தில், பீப் பிரைட் ரைஸ் சாப்பிட்ட போது, சாப்பாட்டில் புழு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.


சமீபகாலமாக தனியார் உணவகங்களில் உணவின் தரம் குறைந்து வருகிறது. அதிலும் முக்கியமாக இறைச்சிகளின் தரம் கேள்விக்குறியாகி வருகிறது. அந்த வரிசையில் சென்னையில், 'பர்வீன் ஃபாஸ்ட் ஃபுட்' என்ற உணவகத்தில், 'பீப் பிரைட் பிரைஸ்' சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர், தன் சாப்பாட்டில் 'புழு' இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.


உடனடியாக தன் மொபைல் போனில், சாப்பாட்டில் புழு இருப்பதை தெளிவாக புகைப்படம் எடுத்துக்கொண்டார். உடனடியாக அங்குள்ள கடைக்காரரிடம், தன் சாப்பாட்டில் புழு இருப்பதை காண்பித்துள்ளார். சுதாரித்துக்கொண்ட கடைக்காரர் புழுவை நசுக்கிவிட்டு தூர எறிந்துள்ளார். பின் பாதிக்கப்பட்டவர் கடைக்காரரிடம் விவாதத்தில் ஈடுபட்டார்.


அப்பொழுது கடையின் சமையல்காரர் ஒருவர்  "விருப்பமிருந்தால் சாப்பிடுங்க, இல்லை என்றால் கடையை விட்டு போங்க, வியாபாரத்தை கெடுக்காதிங்க" என்று பாதிக்கப்பட்டவரை நோக்கி அதட்டி உள்ளார். "நாங்கள் இறந்தாள் பரவாயில்லையா" என்று பதிலுக்கு பாதிக்கப்பட்டவர்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.


தனக்கு நேர்ந்த பரிதாப சம்பவத்தை, பாதிக்கப்பட்ட நபர் தன் மொபைல் போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இக் காணொளி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  

Polimer Tv

Tags:    

Similar News