அம்மன் சிலை கழுத்தில் படம் எடுத்து ஆடிய பாம்பு! எங்கு தெரியுமா?

Update: 2022-08-06 06:30 GMT

உளுந்தூர்பேட்டை: முத்து மாரியம்மன் சாமி கழுத்தில், நாகப்பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியதால், அப்பகுதி பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் மாரியம்மனை தரிசனம் செய்தனர்.


பாம்புகள் தெய்வத்தன்மையின் உச்சம். பாம்புகளை சனாதனம் போற்றி வணங்கி வருகிறது. சிவன் மற்றும் விஷ்ணு ஆகிய இரு கடவுள்களுக்கும் பாம்புகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு என்பதை நாம் அனைவரும் அறிவோம். மேலும் நவகிரகங்களில், 'ராகு' பாம்பின் தலை என்றும்,  மற்றும் 'கேது' பாம்பின் வால் என்றும் குறிப்பிடப்படுகிறது. 


பல தருணங்களில் சிவலிங்கத்தின் மேல் பாம்புகள் படமெடுத்து ஆடுவதை, நாம் அனைவரும் சமூக வலைதளங்களில் பார்த்திருக்கிறோம்.


அதன் வரிசையில், உளுந்தூர்பேட்டை ஏ.புத்தூர் என்னும்  பகுதியில், பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. அக்கோயிலில் ஆகஸ்ட் 2'ஆம் தேதி பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபட்டனர். அப்போது மாலை நேரத்தில் மாரியம்மன் சாமி கழுத்தில், பாம்பு ஒன்று படமெடுத்து ஆடியது. இதனைக்கண்ட அக்கோவில் பக்தர்கள் பரவசம் அடைந்து தரிசனம் செய்தனர். பின் அப்பாம்பு தானாக சாமி கழுத்தில் இருந்து கீழே இறங்கி சென்றது.


மாரியம்மன் கழுத்தில் பாம்பு படம் எடுத்து ஆடும் காட்சி, இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Dinamalar

Tags:    

Similar News