கோவில் சொத்து கோவிலுக்கே! அறநிலையத் துறை ஆட்டம் போடக்கூடாது - ஐகோர்ட் காட்டிய அதிரடி!
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்துஇல மனு தாக்கல் செய்தார். அதில், கோவில்களுக்கு நன்கொடையாக, சொத்துக்களை பக்தர்கள் அளிக்கின்றனர்.
அதனால், கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக கருதக்கூடாது. அவை எல்லாம் கோவில் சொத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால், தங்களின் சொத்துக்களாக அறநிலையத் துறை கருதுகிறது.
அறங்காவலர்களுடன் ஆலோசிக்காமல், கோவில் சொத்துக்களின் உரிமையை மாற்றுகின்றனர். அறங்காவலர்களின் ஒப்புதல் இன்றி, கோவில் சொத்துக்களை மாற்றம் செய்யக் கூடாது. கோவில் சொத்துக்களை, அறநிலையத் துறை சொத்துக்களாக, கோவில்களை அறநிலையத் துறை கோவில்களாக உரிமை கோருவதற்கு, தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறி இருந்தார்.
கோவில் சொத்தில் மாற்றம் மேற்கொள்ள, அறநிலையத் துறை கமிஷனருக்கு அதிகாரம் இருக்கும் வேளையில், அந்தச் சொத்தை, அறநிலையத் துறையின் சொத்தாக கருதக் கூடாது; அது கோவில் சொத்து தான். சொத்து மாற்றத்தை, அறநிலையத் துறை சட்டப்படியே மேற்கொள்ள முடியும் எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், அறநிலையத் துறை சட்டத்தில், கோவில் மற்றும் மத அறக்கட்டளைகள் தொடர்பாக, கமிஷனருக்கு உள்ள அதிகாரம் மற்றும் கடமைகள் பற்றி கூறப்பட்டுள்ளன. கோவிலுக்கு அவசியமானதாக, பயனுள்ளதாக இருந்தால் ஒழிய, கமிஷனரின் ஒப்புதல் இன்றி, கோவில் மற்றும் மத நிறுவனங்களின் சொத்துக்களை குத்தகைக்கு, வாடகைக்கு என மாற்ற முடியாது என கூறி உள்ளது.
Input From: Dinamalar