வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மாணவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசு - உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய வானதி சீனிவாசன்

Update: 2022-08-17 07:17 GMT

வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் இந்திய மாணவர்கள், படிப்பை முடித்த பிறகு, மத்திய அரசு நடத்தும் தகுதி தேர்வில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு, இந்தியாவில் ஓராண்டு காலம் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதன் பின்னரே, மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவை பெற்று, மருத்துவராக பணியாற்ற முடியும்.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள வாய்ப்பு இல்லாமல் ஏராளமான மருத்துவ மாணவர்கள் காத்திருக்கின்றனர்.மருத்துவப் பயிற்சி மேற்கொள்வதற்கான இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதே இதற்கு முக்கிய காரணம். மாவட்ட தலைமை மருத்துவமனைகள், பெரிய தனியார் மருத்துவமனைகளில் பயிற்சி மேற்கொள்ள ஏற்கெனவே இருந்த அனுமதி ரத்து செய்யப்பட்டதாலும் இப்பிரச்சினை மேலும் அதிகரித்துள்ளது. 

பயிற்சி மருத்துவர் இடங்களை 7.5 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக தேசிய மருத்துவ ஆணையம் உயர்த்த வேண்டும். ஏற்கெனவே இருந்தது போல, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளிலும் மருத்துவப் பயிற்சி மேற்கொள்ள மீண்டும் அனுமதி வழங்க வேண்டும். தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவுரைப்படி, 11 புதிய மருத்துவக் கல்லூரிகளிலும் பயிற்சி பெற தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் மாணவர்கள் தரப்பில் முன்வைக்கப்பட்டது. 

இந்த நிலையில் வெளிநாட்டில் மருத்துவ படிப்பை முடித்த தமிழக மாணவர்களுக்கு 2 வருட பயிற்சி அளிக்க மறுக்கும் Tamilnadu medical council செயலை மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டிவியாவிடம் பாஜக தேசிய மகளீர் அணி செயலாளர் வானதி சீனிவாசன் எடுத்துரைத்தார். அமைச்சருக்கு கடிதம் வாயிலாக மாணவர்களின் குறைகளை தெரிவித்துள்ளார். 


மேலும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டிவியா அவர்களும் எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் அவர்களிடம் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளார்.



Similar News