அர்ச்சகரே இல்லாத கோவில் - இந்து முன்னணியினர் நடத்திய போராட்டம்!

அர்ச்சகர் இல்லாத கோவிலில் இந்து முன்னணி போராட்டம் நடத்தி பின்பு, அச்சகரை நியமித்த இந்து சமய அறநிலையத்துறை. Hindu Munnani protest against the HR&CE

Update: 2022-08-27 01:12 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஏமப்பேர் செல்லியம்மன் கோவிலில் அர்ச்சகர் கடந்த 50 ஆண்டுகளாக இல்லாமல் இருந்தார். இந்து முன்னணி கட்சியினர் இது குறித்து போராட்டம் நடத்தி தற்போது முதல் முறையாக இந்த கோவிலில் அர்ச்சகர் ஒருவரை நியமிக்க வைத்துள்ளார்கள்.இந்து முன்னணி கட்சியின் சார்பில் நடைபெற்ற போராட்டம் காரணமாக, தமிழக இந்து சமய அறநிலையத்துறை இந்த முடிவை மேற்கொண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஏற்கனவே இதை போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஏமப்பேர் செல்லியம்மன் கோவில் சொத்துக்களை அபகரித்து பூஜை செய்யாமல் மெத்தனம் காட்டும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகளை கண்டித்து நிர்வாகிகள் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பாரதி, செயற்குழு உறுப்பினர் மணிகண்டன், நகர செயலாளர் பிரபா, நகர செயற்குழு உறுப்பினர் சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர்.


இந்தப் போராட்டத்தை அடுத்து இதே கோவிலில் அர்ச்சகர் நியமிப்பது தொடர்பான இந்து முன்னணி கட்சியினர் சார்பில் நடைபெற்றது. சுமார் ஐம்பது ஆண்டுகளாக ஏமப்பேர் செல்லியம்மன் கோவிலில் அர்ச்சகர் இல்லாமல் வழிபாடில்லாமல் இருந்தது. இந்துமுன்னணியின் பல்வேறு கட்ட போராட்டத்தின் பயனாக அறநிலையத்துறை அர்ச்சகரை நியமித்தது. முதன்முறையாக இந்த கோவிலுக்கு அர்ச்சகர் நியமிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Input & Image courtesy: Twitter

Tags:    

Similar News