ஹிந்துக்கள், கோயில்கள் மீது தாக்குதல் - பிரிட்டன் தூதரகம் வரை சென்ற அர்ஜுன் சம்பத்!

Update: 2022-10-01 11:33 GMT

பிரிட்டனில் ஹிந்துக்கள் மற்றும் கோவில்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். இலங்கையில், ஹிந்து அடையாளங்களை மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும் என்று இலங்கை, பிரிட்டன் துாதரகத்தில், ஹிந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. 

எங்கள் மனுவை பெற்ற துாதரக அதிகாரிகள், இப்பிரச்னை தொடர்பாக, இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறினர். மேலும், மனுவை பிரிட்டன் அரசுக்கு அனுப்பி வைப்பதாகவும், இனி இதுபோன்ற சம்பவம் நடக்காது எனவும் உறுதியளித்தனர்.கனடாவிலும் ஹிந்துக்கள் மற்றும் கோவில்கள் மீது மிகப்பெரிய தாக்குல் நடந்துள்ளது.

இலங்கையின் திரிகோணமலையில் சிவன் கோவில் அருகே, 400 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி, ஹிந்து சமய அடையாளங்களை மாற்றி, பவுத்த அடையாளங்களாக கொண்டு வர, இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இதை தடுக்க வேண்டும் என்று இலங்கை துாதரகத்தில் மனு கொடுத்துள்ளோம்.

இலங்கை அரசு வாயிலாக திரிகோணமலை கோவிலுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுப்பதாக, துாதரக அதிகாரிகள் தெளிப்படுத்தி உள்ளனர் என அர்ஜூன் சம்பத் கூறினார்.

Input From: Dinamalar 

Similar News